ஸ்கல்கேண்டி இயர்போன்
பிரபல, 'ஸ்கல்கேண்டி' நிறுவனம் அதன், ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்கல்கேண்டி டைம் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த இயர்போனின் சிறப்பு, சகாய விலையில் அறிமுகம் ஆகியிருப்பது தான்.கிட்டத்தட்ட, 12 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரி உள்ளது. அத்துடன் தண்ணீர், வியர்வை புகாமல் இருப்பது குறித்த, 'ஐ.பி.எக்ஸ்.4' தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.மூன்று வண்ணங்களில், எடை மிகவும் குறைவாக, 32 கிராமில் வந்துள்ளது இந்த இயர்போன்.விலை: 2,249 ரூபாய்.