ஸ்மார்ட் டேட்டிங்
சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டு, 'பேமிலி ஹப்' எனும், 'ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்' ஒன்றை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். இப்போது இந்த ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர், டேட்டிங் செல்லவும் உதவுகிறது!இந்த குளிர்பதன பெட்டியில், 21 இஞ்ச் டிஸ்பிளேவுடன் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை உள்ளே இருக்கும் உணவு பொருட்களை படமெடுத்து, 'ஆப்' மூலமாக மற்றவர்களுக்கு ஷேர் செய்கிறது. இதை பார்க்கிறவர்கள், சம்பந்தப்பட்டவரின் உணவு முறை, ரசனை, வாழ்க்கை முறை, தேர்வு ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அவருடன் டேட்டிங் செல்வது குறித்து முடிவு செய்து சம்மதம் தெரிவிக்க முடியும். இந்த ரெப்ரிஜிரேட்டர் விலை ரூ.2.80 லட்சம். இனி டேட்டிங் செலவில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.