உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட் மானிட்டர்கள்

சாம்சங் நிறுவனம், அண்மையில், இரண்டு ஸ்மார்ட் மானிட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மானிட்டரில், கம்ப்யூட்டர் மற்றும் மொபைலை இணைத்துக் கொள்ளலாம். மேலும், ஸ்மார்ட் டிவியில் இருக்கும் அம்சங்களான, 'வீடியோ ஆன் டிமான்ட்' உள்ளிட்ட வசதிகளும் இதில் இருக்கின்றன.இந்த ஸ்மார்ட் மானிட்டர், 'எம்7' மற்றும் 'எம்5' என, இரு மாடல்களில் வந்துள்ளன. எம்7 மாடல், 32 அங்குல திரை கொண்டது. மேலும், அல்ட்ரா எச்.டி.,யை சப்போர்ட் செய்யும். எம்5 ஸ்மார்ட் மானிட்டர், 32 மற்றும் 27 அங்குல திரை கொண்டதாக வந்துள்ளது.இரு மாடல்களும், நிறுவனத்தின் இயங்கு தளமான, டைஸென் ஓ.எஸ்., வி5.5ல் இயங்குகிறது. இரண்டிலும், 5 வாட் ஸ்பீக்கர்கள், மானிட்டருடன் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மானிட்டரை, திரையில் அனைத்தையும் மேற்கொள்ளக்கூடிய உலகின் முதல் மானிட்டர் என்கிறது, சாம்சங்.முதற்கட்டமாக, அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய நாடுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த மாத இறுதியில், உலகின் பிற சந்தைகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.தோராய விலை :எம்7 : 29,800 ரூபாய்எம் 5: 20,900 ரூபாய் (32 அங்குலம்)17,150 ரூபாய் (27 அங்குலம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !