நோக்கியா போனில் சில மாறுதல்கள்
கடந்த செப்டம்பரில் 'நோக்கியா சி01 பிளஸ்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த போனில், சேமிப்பு வசதியை அதிகரித்து, புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா சி01 ஸ்மார்ட்போன், கடந்த செப்டம்பரில் 2 ஜி.பி.ரேம் மற்றும் 16 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, 2 ஜி.பி., ரேம் மற்றும் 32 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் புதிய மாடல் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை 6,799 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 16 ஜி.பி., வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முந்தைய மாடல் போன் விலை 5,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 6,299 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.பொதுவான சிறப்பம்சங்கள்:* 5.45 அங்குல எச்.டி., திரை* ஆண்ட்ராய்டு 11 கோ எடிசன்* 128 ஜி.பி., வரை அதிகரிக்கலாம்* 5 மெகா பிக்ஸல் கேமரா* 3,000 எம்.ஏ.எச்., பேட்டரி* 5 வாட் சார்ஜிங் சப்போர்ட்