சோனியின் புதிய கேமரா
சோனி நிறுவனம், அண்மையில்,'சோனி ஆல்பா 1' எனும் புதிய, 'புல்பிரேம் மிரர்லெஸ் கேமரா'வை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இருப்பினும், இதன் விலை எவ்வளவு என்பது குறித்து அறிவிக்காமல் இருந்தது. அமெரிக்காவில், இதன் விலை, 6,498 டாலர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, இந்தியாவில் விலை, 5.60 லட்சம் ரூபாய் என அறிவித்துள்ளது. இருப்பினும், டாலரின் மதிப்பை, நேரடியாக இந்தியா ரூபாய் மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால், இது அதிகமாகவே உள்ளது.மிரர்லெஸ் கேமரா என்பதால், நம்மிடம் ஏற்கனவே இருக்கும் லென்ஸ்களை இதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த கேமரா, தொழில்முறை ரீதியிலான, போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களுக்கு ஏற்றதாகும்.