காலடி எடுத்து வைக்கும் சோனி
பிரபல 'சோனி' நிறுவனம், 'பெர்சனல் கம்ப்யூட்டர் கேமிங்' பிரிவில், தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. 'இன்ஸோன்' எனும் புதிய பிராண்டு பெயரில் இப்பிரிவில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த பிராண்டின் கீழ், புதிதாக இரண்டு மானிட்டர்கள், மூன்று ஹெட்செட்டுகள் என, மொத்தம் 5 பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.'இன்ஸோன் எம் 9' மற்றும் 'இன்ஸோன் எம் 3' எனும் பெயரில், 27 அங்குலத்தில், இரண்டு மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இன்ஸோன் எம் 9 மானிட்டர், 4கே துல்லியத்துடனும்; எம்3 மானிட்டர் 1,080 பிக்ஸல் துல்லியத்துடனும் அறிமுகம் ஆகியுள்ளது.ஹெட்செட்டுகளை பொறுத்தவரை, 'இன்ஸோன் எச்9, எச்7, எச்3' என, மூன்று மாடல்கள் வந்துள்ளன. இவை மூன்றுமே, நீண்ட நேரம் அணிந்தாலும் பெரிய பிரச்னை தராத வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன.சோனி நிறுவனம், இந்த புதிய தயாரிப்புகளை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. பிற நாடுகளின் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து, இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.