ஸ்பாட்டிபை: புதிய வசதி
இசைக்கான செயலியான ஸ்பாட்டிபை, அடுத்த கட்டமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்றவற்றில் இருப்பது போன்று, பாடல்களுக்கு என,'ஸ்டோரீஸ்' சேவையை ஏற்படுத்தும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறது.இதற்கான வெள்ளோட்ட முயற்சிகள் அரங்கேறி உள்ளன. மற்ற செயலிகளில் பொதுவாக வீடியோ, செய்திகள், படங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வார்கள். இதில் பாடல்கள்.இந்த, ஸ்டோரீஸ் பியூச்சரில், நமக்கு விருப்பமான பாடல்களை அல்லது, நம் வசமிருக்கும் பாடல் தொகுப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். பிறகென்ன, ஒரு பிரபலம் தனக்கு பிடித்த பாடல்களை பகிர்கிறார் என்றால், ஒரு பெருங்கூட்டமே அதை பின்பற்றுமே!எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!