நீட்டலாம், இழுக்கலாம், திருகலாம்
தென்கொரியாவைச் சேர்ந்த, எல்.ஜி., நிறுவனம், புதுமையான ஒரு டிஸ்ப்ளேவை தயாரித்துள்ளது. இந்த டிஸ்பிளேயின் சிறப்பம்சம், இதன் அளவை இழுத்து நீட்டித்துக்கொள்ள இயலும் என்பது தான். எச்.டி., துல்லியத்துடன் கூடிய இந்த 12 அங்குல டிஸ்ப்ளேவை, 14 அங்குலம் வரை நீட்டித்துக் கொள்ள முடியும். மேலும், இதை காட்சியில் எந்த பாதிப்பும் இன்றி, மடக்கவும், திருகவும் முடியும். இந்த புதுமையான டிஸ்ப்ளேவை, 20 சதவீதம் அளவுக்கு நீட்டித்துக்கொள்ள முடியும் என்கிறது, எல்.ஜி.,நிறுவனம்.இப்படி நீட்டித்துக் கொள்ளக் கூடிய வகையிலான உலகின் முதல் டிஸ்ப்ளே இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த டிஸ்ப்ளேவை, வர்த்தக ரீதியில், பல்வேறு விதமான சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும்; தொழில்நுட்ப உலகில் புதிய மாற்றங்களை இது ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.