உள்ளூர் செய்திகள்

டெல் நிறுவன அறிமுகம்: 4கே துல்லியத்தில் வெப்காம்

'டெல்' நிறுவனம், 4கே துல்லியத்துடன் கூடிய காணொலி கூட்டங்களை நடத்த உதவியாக, 'டெல் அல்ட்ராஷார்ப் வெப்காம்' ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. உருளை வடிவத்திலான இந்த வெப் கேமராவில், குறைந்த ஒளியிலும் 4கே துல்லியத்துடன் வீடியோ காட்சியை வழங்க முடியும். இதற்காக, 'சோனி' நிறுவனத்தின் சென்சார் இதில் பொருததப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமராவில், 'ஆட்டோ பிரேமிங்' வசதியும் இருக்கிறது. செயற்கை நுன்ணறிவு தொழில்நுட்ப துணையுடன், இந்த கேமரா, நாம் அசைந்தாலும், அதுவே தானாக நம்மை போகஸ் செய்து, பிரேமுக்குள் வைத்துக் கொண்டுவிடும்.கொரோனா தொற்று பரவலுக்கு பின், காணொலி வாயிலான கூட்டங்கள் இயல்பான நடைமுறையாகிவிட்ட சூழலில், இத்தகைய கேமராக்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. 'டெல்' நிறுவனத்தின் இந்த வெப்கேமின் விலை, 18,999 ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !