முதல் டேப்லெட்
'நோக்கியா' பிராண்டு உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், அடுத்த மாதம் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, 'நோக்கியா டி20' எனும், 'டேப்லெட்' அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக, அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதியன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா உரிமம் பெற்ற பிறகு, எச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்யும் முதல் டேப்லெட் இது தான். இந்த டேப்லெட், 'வைபை' இணைப்பு மட்டும் கொண்டதாகவும், வைபை மற்றும் சிம்கார்டு கொண்டதாகவும் இரு மாடல்களில் அறிமுகம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த டேப்லெட் 64 ஜி.பி., சேமிப்பகம் கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் 4.ஜி.பி., ரேம், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டதாகவும் இருக்கும் என்கிறார்கள். எதிர்பார்க்கப்படும் விலை:* வைபை மட்டும்: 18,600* வைபை மற்றும் செல்லுலார்: 20,300 ரூபாய்.