புதிய செயலி ஹலோ ஆப்
'வாட்ஸ்ஆப்' நிறுவனத்தின், உலகளாவிய வணிகத்தின் தலைவராக இருந்த நீரஜ் அரோரா, 'ஹலோஆப்' எனும் புதிய சமூக வலை செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி, விளம்பரங்கள் எதுவும் இன்றி இயங்குவதாகும்.அரோரா, வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் இவருடன் பணிபுரிந்த, மைக்கேல் டோனோஹுவுடன் இணைந்து, ஹலோஆப் நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த செயலி, வாட்ஸ்ஆப் மற்றும் 'பேஸ்புக்' ஆகிய இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறது.முழுக்க முழுக்க பாதுகாப்பான செயலி என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆப்பிள் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர்' ஆகியவற்றில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இந்த செயலியில் தனிப்பட்ட உரையாடல்கள், குழுவினருடனான உரையாடல்கள், போட்டோக்களை பதிவேற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.