முந்தைய மாடல் விலையில் புதிய போன் வருகிறது
'சாம்சங்' நிறுவனத்திலிருந்து 'சாம்சங் கேலக்ஸி எஸ் 22' அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலை, இதற்கு முந்தைய மாடலான 'கேலக்ஸி எஸ் 21' போனின் விலை தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.கேலக்ஸி எஸ் 21, இந்த ஆண்டு ஜனவரியில் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி எஸ் 22, அடுத்த ஆண்டு அதாவது, 2022ல் அறிமுகம் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சாம்சங் நிறுவனம் இதுவரை இந்த போன் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இந்த போனின் விலை, தோராயமாக 60,300 ரூபாயாக இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ் 21 பி.இ., எனும் போனை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.