ஒயர்லெஸ் சப்வூபருடன் கூடிய ஒரு சவுண்டுபார் மற்றும் ஒயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, சோனி.'சோனி எச்.டி., _எஸ்400' எனும் இந்த புதிய சவுண்டு பார், நிறுவனத்தின் சகாயவிலை சவுண்டுபார் ஆகும். 'டால்பி ஆடியோ' தவிர, வேறு அட்வான்ஸ்டு ஆடியோ வசதிகளுக்கு இதில் வாய்ப்பில்லை. இதில் சற்று ஏமாற்றமே. அதேசமயம், ஒயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்களில், ஒலி தரத்தில் ஏற்றம் தந்துள்ளது.
ஒயர்லெஸ் சவுண்டுபார்
சிறப்பம்சங்கள்* 330 வாட் அவுட்புட்* 2.1 சேனல்* ஒயர்லெஸ் சப்வூபர்* சப்வூபர் எடை 7.3 கி.கிராம்* பார் ஸ்பீக்கர் எடை: 2.4 கி.கிராம்* எச்.டி.எம்.ஐ., - ஏ.ஆர்.சி., ஆப்டிக்கல் இணைப்பு* புளூடூத் 5 இணைப்பு வசதி* ரிமோட் வசதி* டால்பி ஆடியோ * கறுப்பு வண்ணம் விலை: 21,990 ரூபாய்
ஒயர்லெஸ் ஸ்பீக்கர்கள்
'சோனி எச்.டி., _எஸ்400' சவுண்டுபாரை அறிமுகம் செய்த கையோடு, அடுத்ததாக 'எஸ்.ஏ., - ஆர்.எஸ் 5' எனும் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது, சோனி.இந்த இரண்டு 'ரியர்' ஸ்பீக்கர்களை, சோனியின் பிரீமியம் சவுண்டுபாரிலும் இணைக்கலாம். இரண்டு ஸ்பீக்கரின் மொத்த ஆடியோ அவுட்புட் 180 வாட்.உருளை வடிவு கொண்ட இந்த ஸ்பீக்கர்களை, சுவரில் மாட்டலாம். 360 டிகிரியிலும் ஒலி உலாவரும். இதில் பேட்டரி வசதி உள்ளது. 10 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த ஒயர்லெஸ் ஸ்பீக்கரை பேட்டரியில் மட்டுமின்றி; நேரடியாக ஏ.சி., மின்சாரத்திலும் பயன்படுத்தலாம்.விலை: 47,990 ரூபாய்.