உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட்டான மூன்று ஸ்பீக்கர்கள்

சோனி நிறுவனம், அதன் 'எக்ஸ் சீரிஸ்' வரிசையில், புதிதாக, மூன்று போர்ட்டபிள் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.ஜி., 300, எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.இ., 300, எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.இ., 200 என, மூன்று ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.இவை அனைத்தும் தூசி, நீர் புகாதிருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, 'ஐ.பி.,67' சான்று பெற்றுள்ளது. இந்த மூன்று மாடல்களும், 'எக்ஸ்' வடிவிலான 'பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யுனிட்'டை கொண்டுள்ளது. மேலும், இவை லைவ் மியூசிக்கை தூண்டும் வகையில், 'லைவ் சவுண்டு மோடு' உடன் வந்துள்ளன.முதல் இரண்டு மாடல்களும், 25 மணி நேர பேட்டரி சக்தி கொண்டவை. மூன்றாவது மாடல், 16 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். இந்த மூன்று ஒயர்லெஸ் ஸ்பீக்கர்களும், 5.2 புளூடூத் இணைப்பு வசதி கொண்டவை. 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' வசதியும் உள்ளது.முதல் இரண்டு மாடல்களும், 10ம் தேதி முதல் கிடைக்கும். கடைசி மாடல் 30 தேதியிலிருந்து கிடைக்கும்.விலை:எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.ஜி., 300 : 26,990 ரூபாய்எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.இ., 300: 19,990 ரூபாய்எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.இ., 200: 12,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !