உள்ளூர் செய்திகள்

மீண்டும் ஐபாடு டச்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய, 'ஐபாடு டச்' சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில், 'ஐபாடு' சாதனத்துக்காக, உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். அதை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், நவீன அம்சங்களை உள்ளடக்கி, கடந்த, 2019ல் மீண்டும் ஐபாடு, 'டச்' வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இதன் மேம்பட்ட மாடல், இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த, ஐபாடு பார்வைக்கு, 'ஐபோன் 12' போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !