உள்ளூர் செய்திகள்

மேம்படுத்தப்பட்ட பயர் டிவி கியூப்

'அமேசான்' நிறுவனம், இந்தியாவில், 'மூன்றாம் தலைமுறை அமேசான் பயர் டிவி கியூப்' மற்றும், 'அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் புரோ' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.மூன்றாம் தலைமுறை அமேசான் பயர் டிவி கியூப், முந்தைய மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக வடிவமைப்பு, அதன் வெளிப்புற தோற்றம், வளைவான மூலைகள் என பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.மேலும், புதிய அம்சமாக 'எச்.டி.எம்.ஐ., இன்புட்' வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது.இதனால், வாடிக்கையாளர்கள் வேறு சாதனங்களை அதாவது, டி.டி.எச்., செட் டாப் பாக்ஸ் போன்றவற்றை இதில் இணைத்து, பயர் டிவி கியூப் ரிமோட் வாயிலாக செயல்படுத்தலாம். வாய்ஸ் கன்ட்ரோலும் செய்து கொள்ளலாம். மேலும், வெப்காம் இணைப்புக்காக இதில் யு.எஸ்.பி., இணைப்பும் உள்ளது.மொத்தத்தில் முந்தைய மாடலை விட, இந்த மாடல் 20 சதவீதம் அளவுக்கு அதிக சக்தி வாய்ந்தது என்கிறது, அமேசான். பயர் டிவி கியூப் உடன், அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் புரோ சாதனமும் அறிமுகம் ஆகியுள்ளது.இந்த ரிமோட்டில், இன்பில்ட் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதனால், அலெக்ஸா வாயிலாக, ரிமோட்டை எளிதில் கண்டுகொள்ளலாம். மேலும், இதில் உள்ள பட்டன்களின் பின்புறத்தில் ஒளிரும் வசதி தரப்பட்டுள்ளதால், இருளிலும் எளிதாக பயன்படுத்தலாம்.விலை: பயர் டிவி கியூப் : 13,999 ரூபாய்வாய்ஸ் ரிமோட் புரோ : 2,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !