உள்ளூர் செய்திகள்

வி.யு., சினிமா டிவிகள்

அண்மையில், 'வி.யு., சினிமா டிவி ஆக்ஷன்' வரிசைகள் அறிமுகம் ஆகியுள்ளன. 55 அங்குலம் மற்றும், 65 அங்குலம் ஆகிய அளவுகளில், இந்த, 'வி.யு., சினிமா டிவி ஆக்ஷன்' வரிசைகள் வந்துள்ளன.இவை, டால்பி விஷன் தவிர, எச்.டி.ஆர்., 10, எச்.டி.ஆர்., 10 பிளஸ், மற்றும் எச்.எல்.ஜி., ஆகிய தொழில்நுட்பங்களையும் சப்போர்ட் செய்யும். மேலும், 4கே வீடியோவை சப்போர்ட் செய்யும். இவற்றில் உள்ள சவுண்டு பார், திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என்கிறது, யு.வி., நிறுவனம்.இந்த டிவிகளில் இடம்பெற்றுள்ள, 100 வாட் சினிமாட்டிக் சவுண்டு பாரில், ஜே.பி.எல்., ஸ்பீக்கர்கள் உள்ளன.ஆண்ட்ராய்டு, 9 இயங்கு தளம் கொண்ட இந்த டிவிகளில், 2 ஜி.பி.,ரேம், 8 ஜி.பி. சேமிப்புத் திறன் ஆகியவை இருப்பது கூடுதல் சிறப்பு.விலை: 55 எல்.எக்ஸ்: 49,999 ரூபாய்65 எல்.எக்ஸ்: 69,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !