மீண்டும் கைகளில் ஏறும் வாட்ச்
செல்போனில் நேரம் பார்க்கும் வசதி வரவும், கைகளில் வாட்ச் கட்டும் போக்கு மக்களிடையே மிகவும் குறைந்து போனது. ஆனால், ஸ்மார்ட் போன் அறிமுகமாகி, அதன் பின் ஸ்மார்ட் வாட்சுகளும் அறிமுகம் ஆகவும், இப்போது ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, உலகளவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகம் ஆகி வருகின்றன. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. போட்டி போட்டுக்கொண்டு, பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து வருகின்றன.இந்த வரிசையில், 'இன்பேஸ்' நிறுவனமும், இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்சு களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 'இன்பேஸ் அர்பன் புரோ எக்ஸ் மற்றும் அர்பன் புரோ 2' எனும் இரண்டு வாட்சுகளை, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.