மிரட்டாத விலையில் மிரள வைக்கும் வாட்ச்
'நாய்ஸ்' நிறுவனம், விரைவில் மற்றுமொரு ஸ்மார்ட் வாட்சை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ளது.நாய்ஸ் நிறுவனம், அதன் 'கலர்பிட் புரோ 4' வரிசையில், புதிதாக 'கலர்பிட் புரோ 4 ஆல்பா' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த வாட்ச், 1.78 அங்குல 'அமோல்டு டிஸ்ப்ளே' கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 'ஆல்வேஸ் டிஸ்ப்ளே' மாடலில் வரும் இந்த வாட்ச், 2.5 டி வளைவு வடிவ கண்ணாடியை கொண்டதாகும். மேலும், இந்த வாட்ச் பார்வைக்கு ஓரளவு 'ஆப்பிள் வாட்ச்' போலவே இருக்கக்கூடும். அத்துடன், 'பாஸ்ட் சார்ஜிங்' வசதி கொண்ட இந்த வாட்ச், அரை மணி நேரத்தில் 50 சதவீத சார்ஜை எட்டிவிடும் என்கின்றனர். பேட்டரி ஏழு நாட்கள் வரை தாங்கும் அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மிரட்டாத வகையில், ஓரளவு பட்ஜெட் விலையில், இந்த வாட்ச் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு செய்தி.