உள்ளூர் செய்திகள்

என்ன விலை அழகே!

'கூகுள் பிக்ஸல் வாட்ச்' விலை குறித்து, தகவல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.'கூகுள் பிக்ஸல் 7' மற்றும், 'கூகுள் பிக்ஸல் 7 புரோ' ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, இந்த கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட் வாட்சும் அறிமுகம் ஆகும் என, சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை, கிட்டத்தட்ட 32 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த வாட்சில் வை - பை, புளூடூத் மாடல்களும் இருக்கும் என்று கூறப்பட்டாலும்; அவற்றின் விலை விபரம் தெரியவில்லை. வட்ட வடிவில் இந்த வாட்ச் இருக்கும். சமீபத்திய 'வியரபிள்' இயங்கு தளத்தில் செயல்படும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். மேலும், 'கூகுள் அசிஸ்டென்ட், கூகுள் மேப், கூகுள் வாலட்' போன்ற சேவைகளும் கிடைக்கும் என, கூகுள் ஏற்கனவே தெரிவித்துள்ளது.இவை போன்ற பல அம்சங்கள், இந்த ஸ்மார்ட்வாட்ச் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !