உள்ளூர் செய்திகள்

ஐபோன் 13ல் என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் நிறுவனம், அண்மையில், 'ஐபோன் 12' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை அடுத்து, அடுத்தக்கட்டமாக, 'ஐபோன் 13' தயாரிப்பில் இறங்கி உள்ளது. இதனையடுத்து, இந்த போன் குறித்து பல்வேறு தகவல்கள் வரத் துவங்கியுள்ளன. குறிப்பாக, இந்த போனின் சேமிப்பு திறன் குறித்து, புதிய தகவல் கசிந்துள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளில் இதுவரை அதிகபட்ச சேமிப்புத் திறனுடன் அறிமுகமானது, 'ஐபோன் எக்ஸ்.எஸ்.,' ஸ்மார்ட்போன் மட்டுமே. இந்த போனில் தான் அதிகபட்சமாக 512 ஜி.பி., சேமிப்புத் திறன் இருந்தது. அதன் பிறகு, ஐபோன் 11 மற்றும் 12 என வந்தபோதும், சேமிப்புத் திறனை மேற்கொண்டு அதிகப்படுத்தவில்லை.இந்நிலையில், அடுத்து வரவிருக்கும், 'ஐபோன் 13', ஒரு டி.பி., சேமிப்பு திறனுடன் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும், 'ஐபோன் 13' வரிசையில், 'புரோ' மாடலில் மட்டுமே சேமிப்பு திறன் அதிகமாக இருக்கும் என்றும், மற்ற அடிப்படை மாடலில், 128 ஜி.பி., திறன் மட்டுமே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.'ஐபோன் 13'ல், திரையிலேயே விரல்ரேகையை பதிக்கும் வசதியும்; 'வைபை 6 இ' இணைப்பை ஏற்கும் வசதியும் இருக்கும் என்கின்றனர். நாளை அறிமுகம் ஆகிறது இந்திய தயாரிப்பான, 'ஐடெல் ஏ47' ஸ்மார்ட்போன், நாளை அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது குறித்த இணைய தள தகவல்களில், இந்த போன் பெரிய அளவிலும், கூடுதலான சேமிப்புத் திறனுடனும், மிகுந்த பாதுகாப்புடனும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கேமரா செட் அப்புடன், விரல் ரேகை பதியும் வசதியும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த போன் இரு வண்ணங்களில் அறிமுகமாகும் என்கிறார்கள்.விலை, 6,000 ரூபாயாக இருக்கக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !