வாட்ஸ் ஆப் புதிய சேவை
புதிய வசதி ஒன்றை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளது,'வாட்ஸ் ஆப்!' இதன்படி, வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள், அதன் சேவையை, ஐந்து சாதனங்களில் இணைத்துக் கொள்ள முடியும். மேலும் ஒரே சமயத்தில் அவற்றை பயன்படுத்தவும் முடியும்.இதுவரை இந்த வசதியை விருப்பப்பட்டவர்களுக்கு, 'பீட்டா' எனும் வெள்ளோட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுவில் கொண்டுவரப் பட்டுள்ளது. மொபைல்போன் தவிர, மேலும் நான்கு சாதனங்களிலும் இணைத்துக் கொள்ளலாம். இருப்பினும், இதில் சில சிக்கல்களும் உள்ளன. அனைத்து மாடல் சாதனங்களிலும் இதை பயன்படுத்த இயலாது. ஒரே சமயத்தில் இரு போன்களை பயன்படுத்த முடியாது. இப்போதைக்கு 'டேப்லெட்'டுடன் இணைக்க முடியாது. நாம் பயன்படுத்த உள்ள சாதனம், இந்த சேவையை பயன்படுத்தும் வகையில் 'அப்டேட்' தகுதி கொண்டதாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன், வாட்ஸ் ஆப் வெப் தளத்தில் மட்டுமே இணைக்க முடிந்தது. இப்போதைக்கு ஐ.ஓ.எஸ்., சாதனங்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.எப்படியோ, வெகு விரைவில், 'டெஸ்க்டாப், லேப்டாப்' என அனைத்திலும், நம் வாட்ஸ்ஆப் சேவையை ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.