கட்டைவிரல் இருக்க கை எதற்கு?
பிரபல, 'லாஜிடெக்' நிறுவனம், புதிதாக, 'எர்கோ எம் 575' எனும், 'ஒயர்லெஸ் டிராக்பால் மவுஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.கம்ப்யூட்டரில் மிக அதிக நேரம், கடுமையாக பணியாற்றுபவர்களுக்கு பயன்படும் வகையில், இந்த மவுசை உருவாக்கி இருப்பதாக, லாஜிடெக் தெரிவித்துள்ளது.இந்த மவுஸ், அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாதது மட்டுமின்றி; வேலை செய்யும்போது, சவுகரியத்தையும் கொடுக்கிறது.இந்த மவுசில் உள்ள கண்ட்ரோல் மூலமாக, கம்ப்யூட்டர் கர்சரின் அசைவுகளை கட்டுப்படுத்தும்போது, கைகளுக்கு பெரிய வேலை இருக்காது. கட்டை விரல் அசைவு மட்டுமே போதுமானது, மணிக்கட்டு மற்றும் கை அசைவு களுக்கு அவசியமிருக்காது.விலை: 3,700 ரூபாய்