உள்ளூர் செய்திகள்

வைபை ஒன்லி டேப்லெட்

'இது சாம்சங் வாரம்' என சொல்லும் அளவுக்கு இந்நிறுவன தயாரிப்புகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. சாம்சங் நிறுவனம், அதன் 'கேலக்ஸி எஸ்.7 எப்.இ., ஆண்ட்ராய்டு டேப்லெட்'டின் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.கடந்த ஜூனில் எல்.டி.இ., மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது, 'வைபை ஒன்லி' மாடலை அறிமுகம் செய்துள்ளது. வைபை ஒன்லி என்பது தவிர, மற்றபடி அதே அம்சங்களையே கொண்டுள்ளது.இந்த டேப்லெட் உலோக கட்டமைப்புடன் 608 கிராம் எடை கொண்டதாக வந்துள்ளது. 12.4 அங்குல திரை கொண்டது. இது 'டால்பி அட்மோஸ் சப்போர்ட்' செய்யும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதன் பேட்டரி 10,090 எம்.ஏ.எச்., திறன் கொண்டதாகும்.4ஜி.பி.,ரேம் மற்றும் 64 ஜி.பி., சேமிப்பகம் கொண்டுள்ளது.விலை: 41,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !