தொடாமலே தொடரும்
'அமோல்டு டிஸ்ப்ளே மற்றும் புளூடூத் காலிங்' ஆகிய இரு அம்சங்களுடன் கூடிய, ஒரு ஸ்மார்ட்வாட்சை முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது, 'நாய்ஸ்' நிறுவனம். பிரபல நாய்ஸ் நிறுவனம், இந்தியாவில் 'நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா 2 பஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.78 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே கொண்டது. இதில் உள்ள ஏ.ஓ.டி., தொழில்நுட்பம் நாள் மற்றும் நேரத்தை அறிவதற்கு, நடக்கும்போது அடியை கணக்கிடுவதற்கு, வாட்சின் திரையை தொடவோ அல்லது பவர் பட்டனை உபயோகிக்கவோ வேண்டிய அவசியமில்லை.இதில் 'வி5.3 புளூடூத்' இணைப்பு வசதி இருப்பதால், பயனர்கள் எளிதாக வாட்ச் வாயிலாகவே, ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்யலாம். இதில் உள்ள பேட்டரி சக்தி 7 நாட்கள் வரை நீடிக்கும்.இதயதுடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்றவற்றை கணக்கிடும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், 100 விதமான 'ஸ்போர்ட்ஸ் மோடு'களும் இதில் உள்ளன.விலை: 3,499 ரூபாய்.