ஜெப் ராக்கெட் 500 ஸ்பீக்கர்
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனத்தின் புதிய 'புளூடூத் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்' இது. வீட்டிலும், வெளியிலும் பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில், ஆர்.ஜி.பி., எல்.இ.டி., விளக்குகள் இருப்பது கூடுதல் சிறப்பு.பழங்கால வடிவிலான 'வால்யூம் கண்ட்ரோல் நாப்' இருப்பது கவர்ச்சிகரமாக உள்ளது.இந்த ஸ்பீக்கர் 20 'வாட்' அவுட் புட் கொண்டது. 'கரோக்கி' வசதி எப்.எம்., ரேடியோ என பல அம்சங்கள் இருப்பது வரவேற்கத் தக்கது. பேட்டரியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை தாங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.விலை: 7,999 ரூபாய்