உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / இடைத்தேர்தல் முடிவுகளால் ஆளும் கட்சிகள் உற்சாகம்!

இடைத்தேர்தல் முடிவுகளால் ஆளும் கட்சிகள் உற்சாகம்!

தமிழகத்தில் காலியாக இருந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில், கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், த.வெ.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சிகள் என, ஐந்து முனைப் போட்டி நிலவிய நிலையில், இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான த.வெ.க., வெற்றி பெற்றுள்ளது.முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்தக் கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தல் களம் இதுவே. இந்த தேர்தலில், த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பலம் அதிகரித்திருப்பதும், அக்கட்சியினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.மதுராந்தகத்தில் த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேல், 74,048 ஓட்டுகளும், தாராபுரத்தில் சத்யபாமா 66,841 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இது, விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கும், அரசின் லஞ்ச ஒழிப்பு போன்ற நிர்வாக நடவடிக்கைகளுக்கும் கிடைத்த மக்கள் ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.'தோல்வி பயத்தில் முதல்வர் விஜய் தெருத்தெருவாக பிரசாரம் செய்கிறார். ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருகின்றனர். அ.தி.மு.க., சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் அளித்த ஆதரவை புறந்தள்ளி விட்டு, குதிரை பேரத்திற்கு அடிமையாகி, எம்.எல்.ஏ., பதவியை உதறி விட்டு, ஆளும் கட்சி பக்கம் சாய்ந்து விட்டனர். அப்படிப்பட்டவர்கள் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால், அவர்களை புறக்கணிக்க வேண்டும். படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்' என, தி.மு.க., - மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள் செய்த பிரசாரம், மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பொதுத்தேர்தலில், இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது, தாராபுரத்தில் கடந்த முறையை விட 35,820 ஓட்டுகளும், மதுராந்தகத்தில், 20,834 ஓட்டுகளும் குறைவாகப் பெற்றுள்ளது, அக்கட்சியின் ஓட்டு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. ஆனால், இரு தொகுதிகளிலும் தி.மு.க., இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, ஆளும் கட்சிக்கு சரியான சவாலாக அக்கட்சியே உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.அதுமட்டுமின்றி, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.க., வுக்கு ஆதரவு அளித்து வரும் வி.சி.க., - ம.தி.மு.க., - காங்கிரஸ்- முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் ஊக்கம் தருவதாகவும், ஆளும் கூட்டணியில் தொடர்வதே நல்லது என, அவர்கள் நினைக்கும் சூழலையும் இடைத்தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ளன.தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகள் த.வெ.க., மீதும், விஜய் தலைமையிலான அரசு மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டினாலும், இந்தப் போக்கு அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடரும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பது சில தரப்பினரின் கருத்து. அதனால், வழக்குகள் காரணமாக தடைபட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், நிலவரம் என்னவாக இருக்கும் என்பது, வரும் நாட்களில் தான் தெரிய வரும்.அதேநேரத்தில், தமிழகம் தவிர புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், பா.ஜ., கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அஷோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிகாஞ்ச் சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இரு தொகுதிகளிலும் அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., கட்சி பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல, அசாமின் நகோன் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும், அம்மாநில ஆளும் கட்சியான பா.ஜ.,வே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. மொத்தத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்தும், அந்தந்த மாநிலங்களின் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kamban
அக் 12, 2026 21:43

விஜய்க்கு சாக்கடைத் வெற்றி என்பது பெரும்பான்மையான வாக்குகளால் கிடைத்தது அல்ல, இருக்கும் கட்சியில் அதிகம் வாங்கியிருக்கிறார், எனவே இந்த சிறு வாக்கு வித்தியாசம் மாற வாய்புள்ளது, அதை தடுக்க விஜய் உண்மையில் எல்லாருக்குமான ஆட்சியை தரவேண்டும்.


அமைதி தூதர்
அக் 12, 2026 21:08

கைபர் பக்துன்வா மாகாண கவர்னர் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும்


Barakat Ali
அக் 12, 2026 15:05

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நாடித் துடிப்பல்ல இது .........


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 12, 2026 10:33

தவெக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம்.....இலவச பஸ் பயணம், தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் அண்ணனின் சீர்.....இவையாவும் அமுலுக்கு வந்தது இடை தேர்தலுக்கு சமீபத்தில் தான்...இலவசங்களை கொடுப்பார்கள் என்றால் தீவிரவாத இயக்கத்தையும் ஆதரிப்பார்கள் நம் மக்கள்....!!!


சூர்யா
அக் 12, 2026 09:00

விஜய் தரப்பினர் தொடர்ந்து கூறி வரும் தி.மு.க,அ.தி.மு.க கூட்டணி என்பதை நிஜமாகவே அக்கட்சிகள் நடத்திக் காட்டினால் த.வெ.க கதை கந்தல்தான்.


சண்முகம்
அக் 12, 2026 08:15

மூன்றில் இரண்டு பங்கு தவெக விற்கு எதிரான வாக்குகள். இதில் உற்சாகம் என்ன வேண்டிக் கிடக்கிறது?


Lakshminarasimhan
அக் 12, 2026 07:08

எல்லாம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மந்திரம் தான் இந்த வெற்றிக்கு அடிகோல் முதலில் இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இல்லையேல் அனைத்து தேர்தலிலும் ஆளும் கட்சிகளே வெல்லும் நிலை இருக்கும் இது ஜனநாயகத்துக்கெதிரானது


thiru
அக் 12, 2026 07:58

அப்போ திமுக தோற்றது எப்படி....


Mathan
அக் 12, 2026 08:50

லூஸு


V SRIDHARAN
அக் 12, 2026 14:06

உங்க அறிவு ஒளி கண்ணைக் கூச வைக்குது.


Sathya Gold
அக் 12, 2026 06:33

ஆம், ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும்,ஆனால் இன்றைய காலத்தில் அனைத்தும் வெற்றி தோல்வியாகவே பார்க்கப்படுகிறது, அடிப்படையில் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பணி என்ன எதற்காக அவர் அந்த பதவிக்கு வருகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்


vijay
அக் 12, 2026 06:25

வெற்றி தான் ஆனால் சிறப்பான வெற்றி ஒன்றும் கிடையாது


Ramona
அக் 12, 2026 07:57

தனிமனிதனாக தனது கட்சியை வெற்றிபெற முடிந்த நிலையில் பிறகு வெற்றிபெற்ற கட்சியுடன் கூட்டு சேர்ந்த கும்பலுக்கு ஏன் சந்தோஷம் இருக்காது.


முக்கிய வீடியோ