உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / யு.பி.ஐ., பரிவர்த்தனை கட்டணம் வளர்ச்சி பயணத்திற்கு அவசியம்!

யு.பி.ஐ., பரிவர்த்தனை கட்டணம் வளர்ச்சி பயணத்திற்கு அவசியம்!

நம் நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையான, யு.பி.ஐ., 2016ல் அறிமுகமானது. அப்போது, எம்.டி.ஆர்., எனப்படும், 'வணிகர் தள்ளுபடி விகிதம்' என்ற கட்டணம் விதிக்கப்பட்டது. அதன்பின், 2020ல், இந்த வணிகர் தள்ளுபடி விகித கட்டணம் பூஜ்ஜியமாக்கப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது. யு.பி.ஐ., பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றபடி பரிவர்த்தனைகளை கையாள்வது, 'சர்வர்' உள்ளிட்ட தொழில்நுட்ப கட்டமைப்புகளை பராமரிப்பது போன்றவற்றுக்கு, வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்களுக்கு அதிகம் செலவாகிறது. இதன் காரணமாகவே, யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகித கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு, 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 75 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக, 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமும், தனி நபரிடமிருந்து வணிகர்களுக்கு அனுப்பப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், ரயில் டிக்கெட்டுகள், எரிபொருள், விவசாய இடுபொருட்கள், கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்துதல், தொலைதொடர்பு சேவைகள் அல்லது பயன்பாட்டு கட்டணங்கள், இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை மற்றும் வரிகள் செலுத்துதல் போன்ற சில வகையான பரிவர்த்தனைகளுக்கு, வணிகர்களிடம் இருந்து நிலையான கட்டணமாக, பரிவர்த்தனை ஒன்றுக்கு, 5 ரூபாய் வசூலிக்கப்படும். மேலும், 'யு.பி.ஐ., - கியூ.ஆர். கோடு வாயிலாக, மாதம் ஒரு லட்சம் வரை பரிவர்த்தனை செய்யும் சிறு வணிகர்களுக்கு, இந்த கட்டண முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், 96 சதவீத பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது' என, மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நடக்கின்றன. அதாவது, 2025 - 26ம் நிதியாண்டில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மதிப்பு, 314 லட்சம் கோடி ரூபாய். இத்தகைய பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் வங்கிகள் அல்லது கட்டண சேவை நிறுவனங்களுக்கு, வணிக தள்ளுபடி கட்டணத்தை அமல்படுத்துவது அவசியம் என்பதால், புதிய முறை அறிமுகமாகி உள்ளது. இதன் வாயிலாக, வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான நிலையான வருவாய் ஓட்டத்தை உறுதி செய்வதுடன், பெருமளவிலான மக்களுக்கு தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சாத்தியமாக்க முடியும் என, மத்திய அரசு நம்புகிறது. எனவே, மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். அத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே அனுப்பப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்பதும், மக்களுக்கு நன்மை தரக்கூடியதே. ஆனாலும், பெரிய வணிகர்கள் இந்த கட்டண சுமையை மறைமுகமாக பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலம் நுகர்வோர் மீது சுமத்தலாம். டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பயணத்தில் சறுக்கலாக, நடுத்தர மக்கள் பெரிய தொகைகளை ரொக்கமாக பெறவும் துாண்டலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆரம்ப காலத்தில், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக, தற்போது அறிவிப்பு உள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், வணிகர்களுக்கு 2,000 ரூபாய்-க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தால், அதை, 1,000 ரூபாயாக இரண்டு முறையாக பிரித்து அனுப்பலாம். பெரிய அளவிலான தொகையை யு.பி.ஐ., வாயிலாக அனுப்பாமல் வங்கியின், 'நெப்ட்' வசதி வாயிலாக செலுத்தலாம் என்றும் யோசனை கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசின் முடிவை, வளர்ச்சிக்கான பயணம் சுமுகமாக நடைபெற அறிமுகம் செய்யப்பட்ட மாற்றமாகவே கருதலாம். அத்துடன், யு.பி.ஐ., சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இடையே போட்டி உருவாகி, பொதுமக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும் என்றும் நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஈசன்
செப் 21, 2026 22:29

அரசு வரிகளையே விதிக்க கூடாது. ஆனால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்றால், கான் கிராஸ் அரசு செய்தது போல அமெரிக்காவிடம் பிச்சை எடுத்து தான் செலவு செய்ய வேண்டும். அதிலும் முக்கால் பாகம் கொள்ளை அடித்து விட்டு மிச்சம் தான் மக்களுக்கு. ரூபாய் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை விற்கும் புதிய ஐபோன் வாங்க கடை வாசலில் 15 மணிநேரம் நிற்கும் மக்கள் UPI பண பரிமாற்றத்துக்கு, நூற்றுக்கு வெறும் 4 பைசா அரசுக்கு கொடுக்க சண்டைக்கு வருகிறார்கள். உடனே ராகுல் காந்தியும் மக்களை பற்றி கவலை பட ஆரம்பித்து விடுவார். நம் நாட்டை போல் ஒரு சுதந்திர நாட்டில் வாழும் இது போன்று மக்களை, அமெரிக்க, சீனா, போன்ற நாடுகளில் வாழும் மக்களிடம் அவர்கள் அனுபவத்தை கேட்க வைக்க வேண்டும். அப்போது தான் புரியும், நம் நாடு எப்பேற்பட்ட சுதந்திர நாடு என்று.


Sivagiri
செப் 21, 2026 22:28

பண பரிமாற்றத்திற்கு, கவர்ன்மெண்ட் ரூபாய் நோட்டை அச்சடித்து மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை , ரூபாய் தாள் புழக்கத்திற்கு பதிலாக , டிஜிட்டல் பரிவர்த்தனையை கொடுக்கிறது , எதுவாகினும் அது அரசின் கட்டாய கடமை ,,, ரூபாய் நோட்டு அச்சடித்து கொடுக்கும் செலவிற்கு பதிலாகத்தான் டிஜிட்டல் பரிவர்த்தனை , இப்போது அதற்கு கட்டணம் வசூலிக்க போவது , மக்களின் அடிப்படை உரிமை மீறல்.... வணிகர்களுக்கு இடையே பரிவர்தனைகளான , செக் டிராப்ட் , நெப்ட் , இதெல்லாம்தான் கட்டண பரிவர்த்தனைகள் , பொதுமக்களின் பரிவர்த்தனைகளை கட்டணம் வசூலிப்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும்


Gokul Krishnan
செப் 21, 2026 21:24

ஆமாம் அப்போது தான் ஜி டிவி நிறுவனர் சுபாஷ் சந்திரா போன்றோர் வாங்கிய பல ஆயிரம் கோடி கடன் உத்தரவாத தொகையை வெறும் 6 கோடி ரூபாய் கட்ட சொல்லி காப்பாற்ற முடியும்


nathan
செப் 21, 2026 19:36

அந்நியன் படத்தில் வரும்" 5 பைசாவா கொள்ளையடிச்சா தப்பில்லையா" ங்குறது ஞாபகத்திற்கு வருது


பைரவன்
செப் 21, 2026 15:17

மிகச் சிறிய தொகையை பணப்புழக்கத்தை மிக மிக எளிதாக்கிய கட்டமைப்புக்கு தருவதில் ஏன் தயக்கம்? கட்டமைப்பின் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் எதிர் கால விஸ்தரிப்புக்காக நாம் நமது நாட்டுக்காக ஒரு சிறிய தொகையை மனமுவந்து தர முன் வர வேண்டும்.


KRISHNAN R
செப் 21, 2026 13:49

வணிகர் GST இன்வாயிசே எல்லாம் அக்கவுண்ட் வராதே இல்லை


Krishna
செப் 21, 2026 10:28

SHAME RulingPartyGovts MegaLooting People for 75%LavishWastefulExpenses especially OverFatPayPerks Freebies etc etc


ஆரூர் ரங்
செப் 21, 2026 10:24

மீதி 3 ரூ சில்லறைக்கு பதிலா 25 பைசா பெறாத சாக்லேட் பெற்ற போது வராத ஆத்திரம், தபால் ஆபீஸில் மணியார்டர் ,கியூ, வங்கி டிராப்ட் கியூ பிறகு அதனை அனுப்ப ரிஜிஸ்டர் தபால் கியூ என நின்ற நேரங்களில் வராத ஆத்திரம் வணிகர்களுக்கு கால் சதவீத கட்டணம் விதிக்கும்போது வருதே. இப்போ UPI வந்த பின் சில்லறைத் தட்டுப்பாடு இல்லை. இதையெல்லாம் தீர்த்த நிர்மலா டுமீல்களுக்கு வேண்டாத மந்திரி?


chinnamanibalan
செப் 21, 2026 09:04

கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம், கட்டுப்பாடு இல்லாத இலவசம் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.


aaruthirumalai
செப் 21, 2026 08:51

சொல்வதற்கு ஒன்றும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை