உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ஒரு போட்டோ கொடுத்தால் சிலையாக மாற்றும் கலை

ஒரு போட்டோ கொடுத்தால் சிலையாக மாற்றும் கலை

ஒரு புகைப்படத்தில் பதிந்திருக்கும் நினைவுகளை 3டி சிற்பமாக மாற்றுவது முதல், நகரின் முக்கிய இடங்களை அலங்கரிக்கும் சிற்பங்கள் வரை, கலைக்கு பல்வேறு வடிவங்களை கொடுத்து வருகிறது, சிலை நிறுவனம். இது மேட்டுபாளையம் ரோடு ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ளது. மேஜை மீது வைக்கக்கூடிய சிறிய சிற்பங்கள் முதல், 20 அடி உயரம் வரையிலான அளவு சிற்பங்கள் வரை இங்கு உருவாக்கப்படுகிறது. கலைக்கூடங்கள், அலுவலகங்கள், வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்கள் மற்றும் நிலப்பரப்பு அலங்காரங்களுக்கான சிற்பங்களும் வடிவமைக்கப்படுகின்றன. ஜி.டி.நாயுடு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் வடிவம், மற்றும் என்.ஜி.ஜி.ஓ. காலனி ரவுண்டானாவில் சமீபத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிற்பமும் இவர்களின் படைப்புகள். ஒருவரின் புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு, 3டி வடிவமாக மாற்றி அச்சு தயாரித்து, சிற்பமாக உருவாக்கப்படுகிறது. சிறிய சிற்பங்கள் சிந்தடிக் மார்பிள் மூலம் தயாரிக்கப்படுகிறது, நிஜ வடிவிலான சிற்பங்கள் எப்.ஆர்.பி. எனப்படும் இண்டஸ்டிரியல் பைபர் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிற்பமும் கைகளால் நுணுக்கமாக மெருகூட்டப்படுகின்றன. தெய்வச் சிலைகளில் திருப்பதி வெங்கடாசலபதி, சித்தி விநாயகர், ஆஞ்சநேயர், அன்னபூரணி, உள்ளிட்ட வடிவங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்படங்களுக்கும் சிற்பங்கள் மற்றும் மொமேன்டோக்களை இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. 'சிலை வேண்டும் ஆனால் எது வாங்குவது என்று குழம்பி இருப்போருக்கு, அவர்களின் சிலை வைக்க போகிற இடத்தை வைத்து எந்த சிலை வாங்குவது என்று நாங்கள் ஐடியேஷன் கூட செய்து தருகிறோம்' என்கிறார், கோவை கிளை மேனேஜர் அபிநயா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி