உள்ளூர் செய்திகள்

பிளாண்டையர் தமிழ் சங்கம் தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், ஈஸ்டர் திருநாள்

மலாவி நாட்டில் பிளாண்டையர் தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் மற்றும் ஈஸ்டர் திருநாள் ஆகிய முப்பெரும் பண்டிகைகள் பிளாண்டையார் நகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிளாண்டையர் தமிழ் சங்கத் தலைவர் மற்றும் ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடத்தின் திட்ட இயக்குனர் முத்துச்செல்வன் இளஞ்செழியனhன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தலைமை விருந்தினராக மலாவி நாட்டிற்கான இந்தியத் தூதர் கோபால கிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்வில் வணக்கம் ஆப்பிரிக்கா இயக்கத்தின் ஒரு அங்கமாக ஆப்பிரிக்க சிறுவர் சிறுமிகள் வணக்கம் சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். கூடவே தமிழ் பாடல்களுக்கு ஆப்பிரிக்க சிறுவர் சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆடிய ஆட்டம் காண்போரைக் கவரும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. - முத்துச்செல்வன் இளஞ்செழியன், பிளாண்டையர் தமிழ் சங்கத் தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் - ஆப்பிரிக்கா முத்தமிழ்கூடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்