உள்ளூர் செய்திகள்

‘’மொம்பாசா தமிழ் சங்கம்’’ சார்பில் தமிழ் புத்தாண்டு

கென்யா: கென்யாவில் உள்ள மொம்பாசாவில் ‘’மொம்பாசா தமிழ் சங்கம்’’ சோபகிருது தமிழ் புத்தாண்டை நியாலி ஹரே கிருஷ்ணா அரங்கில் 23.04.2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடி வரவேற்றனர். இனிய காலை பொழுதில் தமிழ் தாய் வாழ்த்துடன் சங்க துணை தலைவி தீபா குமரகுரு அனைவரையும் வரவேற்று தனது புத்தாண்டு வாழ்த்துரைகளை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு மொம்பாசா தமிழ் நண்பர்கள், குழுவின் உறுப்பினர்கள் என அனைத்து மதத்தினரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். குழந்தைகள் பாட்டுபாடி விருந்தினர்களை மகிழ்வித்தார்கள் சங்க மகளிர் அனைவரும் பாயசம், கேக் இனிப்புகளை வழங்கி அனைவருக்கும் விருந்தளித்தனர். தமிழ் மக்கள் அனைவரும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து கொண்டனர். இந்த விழாவின் முடிவில் நமது தென்னிந்திய உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. - தினமலர் வாசகி தீபா குமரகுரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்