நைஜீரியாவில் ஓணம் பண்டிகை
நைஜீரியாவில் போர்ட்ஆர்கோர்ட் என்னும் இடத்தில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை கேரளத்தின் அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். உலகெங்கிலும் வாழும் மலையாள மக்கள் முன்னோடியாக கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை நைஜீரியாவிலும் போர்ட்ஆர்கோர்ட் என்னும் இடத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்து, அறுசுவையில் கசப்பை தவிர்த்த உணவு படைத்து மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள் - நமது செய்தியாளர் தினேஷ்குமார் செல்வராஜ்