லாகோஸ் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழ் நூல்கள்
தமிழர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் இடையிலான கலாச்சாரப் பரிமாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம், தமிழ் எழுத்தாளர்களை ஆப்பிரிக்க மண்ணிற்கு அறிமுகப்படுத்துவதையும் பெருமையாகக் கருத்துகிறது. அந்த வகையில் தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைப் புத்தகமான 'The days of small Brook and other poems' என்கிற புத்தகத்தை நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தினோம். புத்தகம் எண் 12 இல் உள்ள EPP BOOK SERVICE LIMITED மற்றும் D8 இல் உள்ள THE BOOK COMPANY LIMITED ஆகிய ஸ்டால்களில் கிடைக்கும். தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை, சிறந்த படைப்புகளை ஆப்பிரிக்க மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் தொடர்ந்து முன்னெடுக்கும். - தினமலர் வாசகர் அதியமான் கார்த்திக்