தாய்லாந்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு உதவி
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சார்ந்த முபாரக் என்பவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் எதிர்பாராதவிதமாக ஜூன் 17, 2024 அன்று வாகனம் மோதிய விபத்தில் தலையில் அடிப்பட்டதால் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு இருமுறை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்தார். அவரை இந்தியா அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப் பட்டது . அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரை இந்தியா அழைத்துச் செல்ல அயலகத்துறையின் சார்பாக ரூ.10,41,648/- வழங்கப்பட்டது. அவரும் கடந்த 16.11.2024 அன்று தாய் ஏர்வேஸ் விமானத்தில் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீண்டு வந்து குடும்பத்தாரோடு இணைந்து வாழ அனைவரும் கூட்டாக பிரார்த்தனை செய்வோம். இது குறித்து தாயுள்ளத்தோடு துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசு மற்றும் சிகிச்சைக்கு ஆதரவளித்த நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பாகவும் முபாரக் அலியின் குடும்பத்தினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம். - நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்