தாய்லாந்து இளவரசி ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலுக்கு வருகை
தாய்லாந்து இளவரசி ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலுக்கு வருகை இந்தியாவின் பத்மபூஷன் விருதை ஏற்றுக் கொண்டவரும், முறையாக சமஸ்கிருதம் பயின்றவருமான, தாய்லாந்து நாட்டின் இளவரசி “சோம்தேத் ப்ரா தேபரத்ன ராஜசுதா சாவ்-ஃபா மகா சக்ரி சிரிந்தோன் ஸயாம் பொரோம் ராஜகுமாரி” சிலோமில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அவரிடம் தமிழக கோவில்களைப் போன்றே அமைக்கப்பட்டுள்ள இக் கோவிலில், கருவறை முதல் கொடிமரம் வரை அமைக்கப்படும் முறைக்கான ஐதீக காரணங்களையும் மற்றும் ராஜ கோபுர சிற்பங்களில் வெளிப்படும் தமிழ் கலாச்சாரம், ஆன்மிக தொடர்புகளையும் , கோவில் நிர்வாகம் சார்பாக விளக்கி கூறியதை, கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். நம் சோழ நாட்டுடன் தொடர்பு கொண்ட தாய்லாந்து நாடு, தமிழுடன் தொடர்ந்து பயணம் செய்யும் இது போன்ற நிகழ்வுகள், தமிழர்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.- தாய்லாந்தில் இருந்து சரவணன் அழகப்பன்