உள்ளூர் செய்திகள்

அஸ்கரில் நல்வாழ்வும், கலைப்பாடும், பாரம்பரியமும் ஒன்றிணைந்த முகாம்

நார்வே நாட்டின் அஸ்கர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள போர்கன் அமைதியான சமூக வளாகத்தில் Borgen Innbygtorget, குழந்தைகள் யோகா, இசை மற்றும் கலைஞானத்தில் மூழ்கினர். இது ஒரு சாதாரண முகாம் அல்ல - இது நல்வாழ்வும், படைப்பாற்றலும், பாரம்பரியமும் ஒன்றிணையும் ஒரு பயணத்தின் தொடக்கம். ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாம், ஆர்ட் டு ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் தலைமையில், 6 முதல் 18 வயது வரையிலான 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு தனித்துவமான -அனுபவத்தை வழங்கியது. முகாமின் நோக்கம்? குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களை ஊக்குவித்து, வளர்ச்சி மற்றும் சுய வெளிப்பாட்டை வளர்த்தல்.முகாமின் மையக் கரு: நல்வாழ்வு என்பது ஒரு ஆடம்பரம் அல்ல அது அவசியம் “கவனச்சிதறல்கள் மற்றும் செயல்திறன் அழுத்தம் நிறைந்த டிஜிட்டல் யுகத்தில், நல்வாழ்வு விருப்பத்துக்கு மட்டும் அல்ல, தேவையான ஒன்றாகும்,” என்கிறார் முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமா ரங்கநாதன். ஒவ்வொரு நாளும் யோகா மற்றும் இயக்க பயிற்சிகளுடன் தொடங்கியது. சன்னுதா ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வுகள், குழந்தைகளின் உடல் மற்றும் மன உறுதியை நிலைநிறுத்த உதவின.இசை, தாளம் மற்றும் குரல் பயிற்ச முதல் நாளில், பிள்ளைகள் ஸ்வரங்கள் மற்றும் குரல் நுட்பங்களை கற்றனர். மைக்ரோஃபோன் பயிற்சி, குரல் ஒலியியல் மற்றும் இசையின் அடிப்படை அம்சங்களை அவர்கள் ஆராய்ந்தனர். இரண்டாம் நாளில், தாள அடிப்படையிலான விளையாட்டுகள் மூலம் கணிதம் மற்றும் ஒருங்கிணைப்பு திறன்கள் மேம்படுத்தப்பட்டன. இது அவர்களின் உள்ளுணர்வு (intuition) மற்றும் குழு ஒத்துழைப்பை (team work) ஊக்குவித்தது.காட்சி கலை மற்றும் கதைசொல்லல் பிற்பகலில், கலைஞர் பிரார்த்தனா அகிலுடன் இணைந்து, பிள்ளைகள் இயற்கையின் கூறுகளை வரைவதன் மூலம் தங்கள் பார்வையை மற்றும் புரிதலை வெளிப்படுத்தினர். இது காட்சி கதைசொல்லலின் மூலம் சூழலியல் விழிப்புணர்வை வளர்த்தது.டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம்: கலை + தொழில்நுட்பம் இரண்டாம் நாள் பிற்பகலில், மூத்த மாணவர்கள் 2 நிமிட வீடியோக்களை திட்டமிட்டு, படமெடுத்து, தொகுத்து வழங்க கற்றனர். இயற்கை மற்றும் நிலைத்தன்மை பற்றிய கருத்துகளை அவர்கள் தங்கள் சொந்த குரலில் பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் முகாமின் இறுதி பகிர்வு அமர்வில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்பட்டன.முகாமின் நோக்கம்: இந்த முகாம், ஆர்ட் டு ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் முக்கிய நோக்கங்களை பிரதிபலிக்கிறது: ●​ கலை வழியாக மென்மையான திறன்களை (soft skills) வளர்த்தல் ●​ இயற்கை மற்றும் நிலையான வளர்ச்சி (Sustainability) பற்றிய விழிப்புணர்வை வளர்த்தல்●​ பாரம்பரிய கலை வடிவங்களைப் போற்றுதல் ●​ குழந்தைகளுக்கு தங்கள் குரலைக் கண்டறிய உதவுதல்'கலையையும் ரசனையையும் கொண்டு, அடுத்த தலைமுறையினரிடம் ஆர்வத்தையும் பரிவுணர்ச்சியையும் வளர்த்து வருகிறோம்,' என்கிறார் உமா.பயிற்றுநர்களின் பங்களிப்பு ●​ இசை: உமா ரங்கநாதன் - பாடகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் கல்வியாளர்●​ யோகா: சன்னுதா ஜெயராம் - யோகா அலையன்ஸ் சான்றிதழ் பெற்ற பயிற்றுநர்●​ காட்சி கலை: பிரார்த்தனா அகில் - கட்டிடக் கலைஞர் மற்றும் கலை ஆராய்ச்சியாளர்சமூக தாக்கம் ஒன்று இந்த முகாம், நார்வேயில் வாழும் இந்திய சமூகத்தில் ஒரு புதிய கலாச்சார அலைக்குச் சின்னமாக அமைந்தது. முகாமின் இறுதியில், பிள்ளைகள் தங்கள் கலைப்படைப்புகள் மற்றும் வீடியோக்களை பெற்றோர்களுடன் பகிர்ந்தனர் - ஒரு உணர்வுபூர்வம் மற்றும் பெருமை மிக்க தருணம். 'பாரம்பரியம் மற்றும் நவனத்துவத்தின் இணக்கத்திற்கு இசை, மனஅமைதி மற்றும் கற்பனை வழியாக சமநிலையை அடைய முடியும். இதுவே நமது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய உண்மையான வழிகாட்டல்,' என்று கூறுகிறார் உமா.தொடர்புக்கு:Instagram: @arttoheartinstitute​தகவல் மற்றும் பத்திரிகை விசாரணைகள்: arttoheartinstitute@gmail.com Contact & Press Inquiries: Art to Heart Institute - Development, appreciation and wellness Through Asian Arts arttoheartinstitute@gmail.com 901 16 530 Day 1 highlights: https://www.instagram.com/reel/DK-D5BvS1Tu/?igsh=MXAzYWFwNW9xMGxvZQ=Day 2 highlights: https://www.instagram.com/reel/DLDCpaKS8jJ/?igsh=MXJjbjBwbzE5cjg1Mw==


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்