உள்ளூர் செய்திகள்

நவ.,14ல் துபாயில் இணைய வழிநூல் அறிமுக விழா

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகப் பிரிவு சார்பில், எழுத்தாளர் முதுவை ஹிதாயத் எழுதிய 'ஷார்ஜாவின் சிற்பி - மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி' என்ற நூலின் அறிமுக விழா இணையவழியில் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அமீரக நேரப்படி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரையிலும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகம்மதலி தலைமை வகிக்கிறார். முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஹ்ரூப் முன்னிலை வகிக்கிறார்.நூல் அறிமுக உரைகள்: காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் - இலங்கை. ஜனாப். செய்யது அபுதாஹிர் - மேலாண்மை இயக்குநர், அல் ரீம் குழுமம், துபாய். முனைவர் ஆ. முகம்மது முகைதீன் - நிதி ஆலோசகர், MDS Global Business Solutions LLC. முனைவர் சே. முனியசாமி - உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை. கவிஞர் நூர் பாத்திமா - வானொலித் தொகுப்பாளர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்.நூலாசிரியர் முதுவை ஹிதாயத் ஏற்புரையாற்றுகிறார். இவர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகப் பிரிவின் நூலகாசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் ஷார்ஜாவின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புகளை எடுத்துரைக்கும் இந்நூல், 45வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஏற்கனவே வெளியிடப்பட்டது.இந்த இணையவழி நூல் அறிமுக விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.- நமது வாசகர் நவாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்