துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சிதுபாய் ; சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் சோனப்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர்கள் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 500 தொழிலாளர்களுக்கு பிரியாணி, பழங்கள், தண்ணீர், லபான், ஈத்தப்பழம் உள்ளிட்ட இஃப்தார் ஆகிய பொருட்கள் கொண்ட தொகுப்பு க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் , துபாய் மைந்தன் நசீர்மற்றும் ஜாபர் ஆகியோரின் ஒத்துழைப்பில் விநியோகிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் க்ரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர் ரசூல், மற்றும் தன்னார்வலர்கள் மன்சூர், யஷீர், முஹம்மது ரவூப், ஜீப்ரீல், ஜன்னத்துல் பிர்தவுஸ், ரமேஷ்,லின்சோ தேவி பங்கேற்று சிறப்பித்தனர்.---- நமது வாசகர் அப்துல் ரஹ்மான்