உள்ளூர் செய்திகள்

துபாயில் இந்திய தோல் பொருள் வர்த்தக கண்காட்சி

துபாய் : துபாய் பெஸ்டிவல் சிட்டியில் இந்திய தோல் பொருட்கள் தொடர்பான வர்த்தக கண்காட்சி தொடங்கியது.இந்த கண்காட்சியை இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இதில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு முன்னணி தோல் பொருட்கள் வர்த்தக நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றன.இதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து அதிக அளவு வர்த்தகம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. --- துபாயில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !