அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் விளையாட்டு குழு
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் விளையாட்டு குழு ஏற்படுத்தப்பட்டது.உறுப்பினர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவின் தொடக்க விழாவையொட்டி கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாகிகள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.- நமது செய்தியாளர், காஹிலா