ஜன., 17 ல் தொழில் நகரில் தொழில் முனைவோர் மாநாடு
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உயரிய நோக்குடன் கடந்த 38 ஆண்டுகள் இடையறாது செயல்பட்டு வருகின்றது. உலகத் தமிழர்களை மொழி, கலாச்சாரம், பண்பாட்டின் வழியாக ஒருங்கிணைப்பது மட்டுமின்றி அவர்களின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தையும் அமைத்துத் தருகிறது. அவ்வகையில், பேரவையின் பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு FiTEN, இந்த ஆண்டு (2025) மதுரையில் வெகுசிறப்பாக நடைபெற்று உலகத் தமிழ் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாநாடு 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' எனும் சிறப்பைத் தன்னகத்தே கொண்ட கோவையில் எதிர்வரும் (2026) சனவரி 17-ஆம் நாள் நடைபெற உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம் ! 'பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்' குறள் 675 [வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குறை தீர எண்ணிச் செய்ய வேண்டும்] உலகெங்கும் உள்ள தொழில் முனைவோர்களையும், முதலீட்டாளர்களையும், புத்தாக்க ஆர்வலர்களையும், கனவுகளைச் சுமந்து வரும் ஆற்றல்மிகு இளம்தலைமுறைகளையும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து • அவர்தம் எண்ணங்களை வண்ண மயமாக்க, • வணிக வாய்ப்புகளை ஆராய, மேம்படுத்த, • தொழில் உருவாக்கம், வளர்ச்சி பற்றி கலந்துரையாட என சிறப்பானதொரு தளம் அமைத்து தருவதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இதில் கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு இணைந்திருங்கள் @ https://fiten.org/