களைகட்டிய சார்லட் தமிழ்ச் சங்க விளையாட்டுப் போட்டிகள்
சார்லட் தமிழ்ச் சங்கத்தின் கைப்பந்து மற்றும் வீச்சுப்பந்து போட்டி, சார்லட் மாநகரில் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று சிறப்பாக நடைபெற்றது இந்தப் போட்டியில் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் மிக உற்சாகமாக கலந்துகொன்றனர். போட்டிகளை சார்லட் தமிழ்ச் சங்கத் தலைவர் ரூபன் குழந்தைசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னியப்பன் ஷண்முகம், ராகேஷ் சேஷன் அனைவரையும் வரவேற்று கைப்பந்து மற்றும் வீச்சுப்பந்து போட்டியை துவங்கிவைத்தனர். பெண்களுக்காக நடந்த வீச்சுப்பந்து போட்டியின் இறுதிச் சுற்று போட்டிக்கு ஸ்டார்ம் கேட்சேர்ஸ் மற்றும் குயின் சிட்டி வாரியர்ஸ் தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் குயின் சிட்டி வாரியர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர். ஆண்களுக்கான நடந்த முதல் பிரிவில் கரோலினா ஸ்டார்ம் அணியினர் முதல் இடத்தையும் வர்க்கர்ஸ அணியினர் இரண்டாம் இடத்தையும் வென்றனர். இரண்டாம் பிரிவில் தி அதர்ஸ் அணியினர் முதல் இடத்தையும் வாரியர் சூப்பர் கிங்ஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும் வென்றனர். மூன்றாம் பிரிவில் நடந்த இறுதிச் சுற்று போட்டியில் பல்லாண்ட்டின் டாமினேட்டர்ஸ் அணியினர் முதல் இடத்தையும் எஸ் டி வூல்ப்ஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்து கோப்பைகளை வென்றனர். போட்டிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஆண்ட்ரு கன்னிகைராஜ், முருகன் நடேசன், திரு செந்தில் S.P, திருமிகு ரூபா ஜெய்சங்கர், தருண் சிங்காரவடிவேலு , இளங்கோ குப்புசாமி, பொன்மாறன் திருவாசகம், வசந்தா கவுரி, திவ்யா தபார்த்தி ஆகியோர்க்கு போட்டியின் நிறைவு உரைகளில் செயற்குழு உறுப்பினர்கள் அசோக் சுப்பிரமணியன், ஆனந்த் திருநாராயணன், விக்னேஷ் மீனாட்சிசுந்தரம் மற்றும் பிரவீன் நரசிம்மன் சார்லட் தமிழ்ச் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர் . தகவல்- அசோக் சுப்பிரமணியன், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் (செயற்குழு உறுப்பினர்) - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்