தாய்லாந்தில் செட்டிநாட்டு பிள்ளையார் நோன்பு
தாய்லாந்தில் செட்டிநாட்டு பிள்ளையார் நோன்புசெட்டிநாட்டு நகரத்தார்களுக்கே உரிய முக்கிய விழாக்களில் மிகுந்த தொன்மையும், பெருமையும் உடைய விழாவாக கடைப்பிடிக்கப்படுவது பிள்ளையார் நோன்பு.காரைக்குடியை சுற்றி அமைந்துள்ள செட்டி நாட்டு பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டு, உலகெங்கும் பரவி வாழும் நகரத்தார்களால் பிள்ளையார் நோன்பு கடந்த 25 டிசம்பர் வியாழக்கிழமை சிறப்பாக கொண்பாடப்பட்டது. தாய்லாந்து நாட்டில் வாழும் நகரத்தார்கள், குருவிக்கொண்டான் பட்டியைச் சார்ந்த பழநியப்பன் அபிராமி இல்லத்தில், சிறுகூடல்பட்டியைச் சார்ந்த சேது அண்ணாமலை செட்டியார் இழை எடுத்துக் கொடுக்க, தேவகோட்டை மற்றும் பி.அழகாபுரியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.- தாய்லாந்திலிருந்து நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்