இளம் தலைமுறையின் பறை இசையுடன் தமிழர்களின் தைப்பொங்கல் விழா
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா ஜனவரி 25ஆம் தேதி அன்று அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பியர்லாந்து மேயர் கெவின் கோல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஊக்குவித்தார். தமிழர்களின் பொங்கல் பண்டிகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பல நடைபெற்றது இவ்விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஹூஸ்டன் பறைக்குழுவில் உள்ள சிறுவர்கள் மட்டுமே நடத்திய பறை இசை அனைவரையும் மிகவும் கவர்ந்தது அமெரிக்காவில் முதல் முறையாக யூஸ்டனில் சிறுவர்கள் மட்டுமே நடத்திய முதல் பறை இசை நிகழ்ச்சி. இது விழாவின் தனித்துவத்தையும் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளையும் போற்றும் வகையில் இப்பறை இசையும் இந்த விழாவும் அமைந்தது. பறை இசைக்கு தகுந்தார் போல் சிறுவர்கள் உற்சாகமாக நடமாடினர் சிறப்புரையாற்றிய மேயர் கவின் கோல் பறையிசை இசைத்த சஞ்சீவ், சிம்ரீட்டா, ஹரி, லட்சுமி மற்றும் கவினுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அமெரிக்காவில் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பறை இசைத்து நம் பாரம்பரிய இசையான பறை இசையை இவ்வுலகிற்கும் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றது மிகையானது - நமது செய்தியாளர் தங்கராஜ் பேச்சியப்பன்