உள்ளூர் செய்திகள்

பாலாஜி கோயில், சான் ஜோஸ்

அமெரிக்கா, கலிபோர்னியா, சான் ஜோஸில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில் பாலாஜி மற்றும் மகாலட்சுமி மூலவராக உள்ளனர். பாலாஜி கோயில் என்பது இந்தியாவின் வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் உலகளாவிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மிக, லாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தக் கோயில் சுவாமி நாராயணானந்தரால் 2006 ஆம் ஆண்டு சன்னிவேலில் நிறுவப்பட்டது. சான் ஜோஸில் உள்ள கோயில் 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சமூகப் பங்களிப்புக்காக இந்தக் கோயில் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்திடமிருந்து அங்கீகாரச் சான்றிதழைப் பெறறுள்ளது. 2010 ஆம் ஆண்டிலிருந்து, இலவச யோகா வகுப்புகள் மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெறுகின்றன. சாய்பாபா மற்றும் பாண்டுரங்க தெய்வங்களுக்கும் இங்கு சந்நிதிகள்உள்ளன. சிவ ராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற அனைத்து முக்கிய இந்து பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகிறது. மக்கள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக குரு ஆற்றிய சேவைகளுக்காக கடவுளை மகிமைப்படுத்தவும், அவரை கௌரவிக்கவும் கோயிலின் வருடாந்திர குருவந்தன பூஜை கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !