உள்ளூர் செய்திகள்

மகா கணபதி கோயில், அரிசோனா

அரிசோனாவின் மரிகோபாவில் அமைந்துள்ளது அரிசோனா மகா கணபதி கோயில். பீனிக்ஸ் பெருநகரப் பகுதியின் இந்து மக்களுக்கு சேவை செய்யும் பல கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இது அரிசோனாவின் டக்சனில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. மகா கணபதி இந்த கோயிலின் மூலவராக இருந்தாலும், பிற இந்து தெய்வங்களுக்கு இங்கு சந்நிதிகள்உள்ளன.[2] தினசரி பூஜைகள்/ சேவைகள் மட்டுமல்லாமல், முக்கிய இந்து பண்டிகை நாட்களைக் குறிக்கும் சிறப்பு சேவைகளும் நடைபெறுகிறது.1999 ஆம் ஆண்டில், கவாய் ஆதீனத்தைச் சேர்ந்த சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி அரிசோனாவில் கட்டப்படவுள்ள ஒரு புதிய இந்து கோயிலுக்கு 1,400 பவுண்டுகள் எடையுள்ள, 4 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை மூர்த்தியாக பரிசளித்தார். நவம்பர் 2000 இல், அரிசோனாவின் மகா கணபதி கோயில் அதிகாரப்பூர்வமாக ஒரு இலாப நோக்கற்ற, மத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில், மரிகோபாவில் 15 ஏக்கர் நிலம் இந்த அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 25, 2007 அன்று, 8,000 சதுர அடி கொண்ட கோயிலின் அடிக்கல் நாட்டும் பணி தொடங்கியது. மே 2008 இல் கோபுரங்கள் கட்டப்பட்டு, மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 2010 ஆம் ஆண்டில் கூடுதல் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்யவும், கோபுரங்கள் கட்டவும் முடிவு செய்ப்பட்டு, 2011 ஆம் கூடுதல் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன, 2012 ஆம் ஆண்டில், கட்டிடத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இந்திய கலைப்படைப்புகளை செதுக்க சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். 2014 ஆம் ஆண்டில், கோயில் அதன் நான்கு கோபுரங்களும் இந்திய கலையம்சத்துடன் நிறைவு பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !