உள்ளூர் செய்திகள்

சங்கட் மோச்சன் ஹனுமான் கோயில், மவுன்ட் மடோனா

சங்கட் மோச்சன் ஹனுமான் கோயில் ஸ்ரீ பாபா ஹரி தாஸ் மற்றும் அவரது மாணவர்களால் பக்தி மற்றும் அமைதிக்கான இடமாக நிறுவப்பட்டு கட்டப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், பாபாஜியின் நீண்டகால மாணவர்கள் சிலர், இந்தியாவிலிருந்து ஹனுமன் மூர்த்தியைக் கொண்டு வந்தனர். பாபாஜி அந்த சிலையைக் கண்டதும், அதற்கு ஒரு கோயில் தேவை' என்றார். அவர் உடனடியாக மவுண்ட் மடோனா பகுதிக்குச் சென்று கோயிலுக்கான இடத்தைக் குறிப்பிட்டார். கட்டுமானப்பணி உடனடியாகத் தொடங்கி 2003 இல் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. மவுண்ட் மடோனா மையத்தின் மைதானத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், தினமும் இரண்டு முறை ஆரத்தி சேவைகளும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முழு நிலவுக்கு முன் சிந்தூர் பூஜை மற்றும் சாலிசா பாட விழாக்களும், பிற பாரம்பரிய இந்து விழாக்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன.இந்த கோயில் சனிக்கிழமைகளில் - காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரையும், செவ்வாய் கிழமைகளில்- மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.முன்பதிவுகள்வருகை நாளுக்கு முந்தைய வாரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யப்படாத வருகைகள் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை ஆரத்திக்கு மட்டுமே (காலை 6 மணி முதல் 7:30 மணி வரை) அனுமதிக்கப்படுவர். சனிக்கிழமைக்கான முன்பதிவுகள் முந்தைய திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்படுகின்றன. செவ்வாய் கிழமைக்கான முன்பதிவுகள் முந்தைய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் வெளியிடப்படுகின்றன. கோயில் தரிசன முன்பதிவு செய்தவர்கள் 2 மணிநேரம் வரை ஹனுமன்ஜியைத் தரிசனம் செய்யலாம். பார்வையாளர்கள் கோயில் மைதானம் மற்றும் ஓஎம் பூங்காவிற்குச் செல்லலாம். ஆஞ்சநேயாஸ் வேர்ல்ட் கஃபேயில் சாய் மற்றும் சமோசாக்கள் உள்ளிட்ட சிற்றுண்டிகளை அனுபவிக்கலாம். மற்றும் ஓஷன்வியூ புக் அண்ட் கிஃப்ட் ஸ்டோர் மூலம் ஷாப்பிங் செய்யலாம். மவுண்ட் மடோனா மையத்தில் இரவு தங்குவதற்கு அல்லது யோகா அல்லது தியானப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம்.https://youtu.be/7YQfnaUJsOY


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !