
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால், பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக, உங்களது குறைகளையே எண்ணிப்பாருங்கள்.
* உலகம் முழுவதையும் அன்பினால் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் யாரும் உங்களுக்கு அன்னியரல்ல; உலகம் உங்களுடையதே.
* நம்பிக்கையும் உறுதியுமே மனிதவாழ்வின் அடிப்படைத்தேவை. இவை இரண்டும் இருந்தால் எல்லாம் இருந்ததுமாதிரிதான்.
* உடன் வாழும் உயிர்களில், ஏதாவது ஒன்றுக்காவது உன்னால் மனமகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், உன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.
* கருணையும் இரக்கமும் இருந்தால்தான் ஒருவனை மனிதன் என்று அழைக்க முடியும். ஏழைகளுக்கும் இறைவனின் அடியார்களுக்கும் பணக்காரர்கள் தொண்டு செய்ய வேண்டும்.
- சாரதாதேவியார்