ஜோடியை பார்த்து போடுங்க... படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட நடிகை
ADDED : 1488 days ago
அசுரத்தனமாக வெற்றி பெற்ற படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவர் அந்த நடிகை. அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவருக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. அதன் பின்னர் சில படங்களில் நாயகியாகவும் சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
அப்படி நடன இயக்கம் ஹீரோவாக நடிக்கும் கொட்டும் பூச்சி பெயர்கொண்ட படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். புதுமுகம் என்பதால் நடிப்பிலும் சொதப்ப ரீடேக்குகள் ஆகிக்கொண்டே இருந்துள்ளது. இதனால் அப்செட்டான நாயகி ஓரளவுக்கு முகம் தெரிஞ்ச ஆளா எனக்கு ஜோடி போடுங்க என்று சொல்லிவிட்டாராம். நடிகையை சமாதானப்படுத்தி படப்பிடிப்பை முடித்துளனர்.