மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1421 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1421 days ago
தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', சிம்பு நடித்துள்ள 'மாநாடு', விஷால், ஆர்யா நடித்துள்ள 'எனிமி', அருண் விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்குமுனைப் போட்டியிலிருந்து 'மாநாடு' படம் விலகுவதாக காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது உண்மையாகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛கொரோனா பிரச்னைகளுக்கு நடுவே சில வருட உழைப்பின் பலனாக அறுவடைக்கு காத்திருக்கிறது ‛மாநாடு' படம். விழா நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை மக்கள் பார்ப்பது வழக்கம். அதை எண்ணியே மாநாடு படத்தை தீபாவளிக்கு கொண்டு வர எண்ணினோம். இதை போட்டியாக நான் பார்ப்பதில்லை. அது வியாபார புத்திசாலித்தனமும் அல்ல.
மாநாடு படம் நன்றாக வந்துள்ளது, அதன்மீது பெரிய நம்பிக்கையும் உள்ளது. என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது. விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டுக்குப் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? அதனால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி நவ.,25ல் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
'அண்ணாத்த' படத்தை மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால், 'மாநாடு, எனிமி' ஆகிய படங்களுக்கு அதிகபட்சமாக தலா 150 முதல் தியேட்டர்கள் கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள். 'மாநாடு' படத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் சில நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
1421 days ago
1421 days ago